search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சரவை"

    • தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
    • மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு

    கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

    அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.

    மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    துணை முதலமைச்சர் நியமனம் மற்றும் அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    தமிழகத்தில் மதுக்கடை மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    தமிழ்நாட்டில் இப்போது 4 ஆயிரத்து 829 மதுக்கடைகள் உள்ளன. எப்.எல்.2, எப்.எல்.3 மதுக்கடைகள் 1,685 உள்ளது. மேலும் 400 மதுக்கடைகளுக்கு அனுமதி கேட்டு வந்த விண்ணப்பங்கள் அரசிடம் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளுந்தூர்பேட்டையில் நடத்திய மதுஒழிப்பு மகளிர் மாநாட்டிலும் மதுக்கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

    தமிழக அரசும் போதைப்பொருளுக்கு எதிராக ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மதுக்கடைகளுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருவதால் முதற்கட்டமாக 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

    இது தவிர, அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

    • புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
    • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3-வது அமைச்சராக இடம் பிடித்தார்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

    அதன்படி, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். நாசர், செந்தில்பாலாஜி, ராஜேந்திரன், கோவி.செழியன் ஆகிய 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் அதிரடியாக மாற்றப்பட்டன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இதற்கிடையே அமைச்சரவையின் மூப்புப் பட்டியலை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டார். அதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3-வது அமைச்சராக இடம் பிடித்தார்.

    இந்த மாற்றத்திற்கு பிறகு முதல் முறையாக 8-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பான அழைப்பு, அனைத்து அமைச்சர்களுக்கும் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வரும் 8-ந்தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வருக்கான கூடுதல் அதிகாரத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    • சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

    இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் 8-ந்தேதி காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
    • மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசருக்கு பட்டியலில் 29வது இடம்.

    தமிழகத்தில் 35 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2ம் இடத்தில் அமைச்சர் துரைமுருகன், 3ம் இடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

    4வது இடத்தில் கே.என்.நேரு, 5வது இடத்தில் எல்.பெரியசாமி, 6வது இடத்தில் டாக்டர் கே.பொன்முடி, 7வது இடத்தில் எ.வ.வேலு, 8வது இடத்தில் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 9வது இடத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    10வது இடத்தில் தங்கம் தென்னரசு, 11வது இடத்தில் ரகுபதி, 12வது இடத்தில் முத்துசாமி, 13வது இடத்தில் பெரியகருப்பன், 14வது இடத்தில் தா.மோ.அன்பரசன், 15வது இடத்தில் சாமிநாதன், 16வது இடத்தில் கீதாஜீவன் உள்ளனர்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பட்டியலில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

    புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், கோவி.செழியனுக்கு 27வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

    மீண்டும் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் நாசருக்கு பட்டியலில் 29வது இடம்.

    • பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    • மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

    தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

    2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி

    மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் என்னென்ன துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர்கள் பதவியேற்றதும் ராஜ்பவன் மூலம் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

    தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, கோரிக்கை வலுத்து இருக்கிறதே தவிர பழுக்கவில்லை என்று பதில் அளித்தார்.

    ஆனால் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பிய பின்னர் இதே கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று பதில் அளித்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சராவார் என்றும் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இதனிடையே சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சிறையில் இருந்த அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் கொடுத்ததால், அவரும் வெளியே வந்துவிட்டார். எனவே அவருக்கும் அமைச்சரவையில் இடம் இருக்கும் என்று கூறப்பட்டது.

    இந்தநிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

    முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

    தற்போது அமைச்சர்களாக இருக்கும் செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.



    அதற்கு பதில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகிறார்கள்.

    6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது.

    மேற்கண்டவாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

    புதிய அமைச்சர்கள் 4 பேருக்கும் என்னென்ன துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்து அவர்கள் பதவியேற்றதும் ராஜ்பவன் மூலம் அறிவிக்கப்படும்.

    அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் இருந்தும், கோவி.செழியன் திருவிடைமருதூர் தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

    கோவி.செழியன், தமிழக அரசின் தலைமை கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார். ராஜேந்திரன் சேலம் வடக்கு தொகுதியில் இருந்தும், ஆவடி நாசர் ஆவடி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

    அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு, அரசு தலைமை கொறடா பதவியை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதியநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மேலும், தமிழக அமைச்சரவையில் 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 6 அமைச்சர்களின் இலாக்காக்கள்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சகராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதிவேந்தன்- ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன்- காதி மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுக்கு-நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 

    செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆகிறார். அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன், கோவி.செழியன், ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

    அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.

    தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா ? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.

    ஆளுநர் சென்னை திரும்பியதும் கடிதம் குறித்து ஆளுநர் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

    அதனால், இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் குறித்து பரிசீலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாசா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    • புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம்.

    தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுமா ? என்பது குறித்தும் நாளைய அறிவிப்பில் வெளியாக வாயப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாசா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், துணை முதலமைச்சர் பதவி அறிவிக்கப்படுமா ? புதிதாக அமைச்சர்களாக யாரேனும் அறிவிக்கப்படுகிறார்களா ? என்ற கேள்விக்கு நாளை விடை கிடைக்குமா ? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    அதன்படி, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர்.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

    இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

     

    அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×